2025 மே 21, புதன்கிழமை

கல்பிட்டி பிரதேச சபையின் விசேட சபைக்கூட்டத்தினை கூட்டுமாறு வேண்டுகோள்

A.P.Mathan   / 2013 மே 04 , பி.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஹியாஸ்


கல்பிட்டி பிரதேச சபைத் தலைவருக்கும், ஆளும் கட்சி உறுப்பினர்களுக்குமிடையில் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ளது.

இதன் விளைவாக ஆளும் கட்சியினை சேர்ந்த 5 உறுப்பினர்கள் கல்பிட்டி பிரதேச சபையின் விசேட சபைக்கூட்டத்தினை கூட்டுமாறு கூட்டாக ஒப்பமிட்டு கடந்த வியாழக்கிழமை பிரதேசசபை செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேவேளை கடந்த வியாழக்கிழமை மாதாந்த சபைக்கூட்டம் நடைபெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

குறித்த தினத்தன்று கல்பிட்டி பிரதேச சபைத்தலைவர் தங்களினால் முன்வைக்கப்பட்ட விடயங்களினை ஆராய மறுத்ததினாலேயே மீண்டும் சபைக்கூட்டத்தினை கூட்ட கோரிக்கை விடுத்ததாக தழிழ்மிரருக்கு குறித்த சபை உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காரணங்களுள் சபையின் தற்போதைய நடவடிக்கை தொடர்பாக கலந்துரையாடல் எனும் விடயமும் உள்ளடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இக் கடிதத்தின் பிரதி வடமேல் மாகாண முதலமைச்சருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

ஏற்கனவே கல்பிட்டி பிரதேச சபை தலைவர் பதில் பொறுப்பு வழங்கப்படாமல் வெளிநாடு சென்றமை தொடர்பில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வடமேல் மாகாண முதலமைச்சரிடம் எழுத்து மூலம் முறையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X