2025 மே 21, புதன்கிழமை

மோட்டார் சைக்கிள் திருட்டு: சந்தேகத்தில் இளைஞர்கள் இருவர் கைது

Kanagaraj   / 2013 மே 05 , பி.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். எம். மும்தாஜ்

இசை நிகழ்ச்சி ஒன்றினைப் பார்க்கச் சென்ற இளைஞர் ஒருவருக்குச் சொந்தமான சுமார் மூன்றரை இலட்சம் ரூபாய் பெறுமதியான மோட்டார் சைக்கிளைத் திருடிச் சென்றதாகச் சொல்லப்படும் 17 வயது இளைஞர்கள் இருவரை இன்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளதாக மாராவில பொலிஸார் தெரிவித்தனர்.

நாத்தாண்டிய வத்துகமுல்ல எனும் பிரதேசத்தில் வைத்தே இத்திருட்டுச் சம்பவம் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது.

தனது ஊரில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றினைப் பார்ப்பதற்காகச் சென்ற போது தனது மோட்டார் சைக்கிளை நிகழ்ச்சி இடம்பெற்ற இடத்திற்கு அருகில் இருந்த வீடு ஒன்றிற்கருகில் நிறுத்தி வைத்து விட்டு இசை நிகழச்சியைக் கண்டு கழித்ததாகவும், நிகழ்ச்சி நிறைவடைந்து வந்து பார்த்த போது நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்;கிள் காணாமல் போயிருந்ததாகவும் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.

நாத்தாண்டிய வத்துகமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த தினுச சம்பத் குமார் (வயது 20) என்ற இளைஞனுடையே மோட்டார் சைக்கிளே இவ்வாறு காணமல் போயுள்ளதாக மாராவில பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

இம்முறைப்பாட்டையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட மாராவில பொலிசார் திருடப்பட்ட மோட்டார் சைக்கிளுடன்  வத்துகமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த இரு சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளனர்.  மோட்டார் சைக்கிள் உரிமையாளர் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு அதன் சாவியை மறைவிடமொன்றில் புதைத்ததை தாம் கண்டதாகவும், மோட்டார் சைக்கிள் மீது தாம் கொண்ட ஆசையினால் அதனைத் திருடியதாகவும் சந்தேந நபர்கள் பொலிசாரிடம் தெரிவித்துள்ளனர்.  கைது செய்யப்பட்ட இருவரும் மாராவில நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

மாராவில பொலிசார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X