2025 மே 21, புதன்கிழமை

புதையல் தோண்டிய நால்வர் கைது

Kanagaraj   / 2013 மே 05 , பி.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். எம். மும்தாஜ்

பாரிய விவசாய பண்ணையொன்றில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டதாகச் சொல்லப்படும் நால்வரை இன்று அதிகாலை 3 மணியளவில் கைது செய்துள்ளதாக சாலியவெவ பொலிசார் தெரிவித்தனர்.

 சாலியவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீலபெம்ம எனும் பிரதேசத்தில் வைத்தே இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களுள் தந்தை மகன் ஆகிய இருவருடன் முச்சக்கர வண்டிச் சாரதி மற்றும் மந்திரவாதி ஒருவரும் அடங்குவதுடன் இவர்கள் அனைவரும் வண்ணாத்திவில்லு பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிசார் தெரிவித்தனர்.

 சாலியவெவ பொலிசார் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்ட சமயம் குறித்த விவசாய பண்ணையில் பாரிய குழி ஒன்று தோண்டப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளது.

அங்கிருந்து சேவல் ஒன்றுடன்இ மலர் தட்டுஇ குழி தோண்டப் பயன்படும் உபகரணங்கள் என்பவற்றுடன் முச்சக்கர வண்டியையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.  இவ்வாறு கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களையும் புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக சாலியவெவ பொலிசார் தெரிவித்தனர்.

சாலியவெவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நவீன் இந்திரஜித் தயானந்த தலைமையிலான குழுவினர் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X