2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

உபதிஸ்ஸகம கிராம அபிவிருத்தி நடவடிக்கைகள் வெசாக் தினத்தன்று ஆரம்பம்

Super User   / 2013 மே 06 , மு.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்      
           
புராதன அரசர்கள் ஆட்சி செய்த அநுராதபுரம் உபதிஸ்ஸகம கிராமத்தை துரித கதியில் அபிவிருத்தி செய்ய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளது என வட மத்திய மாகாண முதலமைச்சர் ரஞ்சித் சமரகோன் தெரிவித்தார்.

கடந்த மாதம் 7ஆம் திகதி உபதிஸ்ஸ கிராத்திற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திடீர் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். இதன் பயனாக இந்த கிராமம் சகல வசதிகளையும் கொண்ட கிராமமாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

இதன் முதற்கட்ட பணிகள் எதிர்வரும் வெசாக் தினத்தன்று ஆரம்பிக்கடவுள்ளது. துரித அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 21 கிலோ மீற்றர் வீதியினை காபட் இட்டு புனரமைத்தல், மின்சார வசதி, குடிநீர், சனசமூக நிலையம், சுகாதார வைத்திய நிலையம், விளையாட்டு மைதானம், பாலங்கள் நிர்மானம் ஆகிய அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கபடவுள்ளன.

இதேவேளை உபதிஸ்ஸகம, தெமட்டவௌ, கொக்அபே, மஹபோகஸ்வௌ ஆகிய கிராமங்களிலுள்ள குளங்களும் புனரமைக்கப்படவுள்ளன. மேலும் முதற் கட்டமாக 500 குடும்பங்களை மீள்குடியேற்றும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X