2025 மே 21, புதன்கிழமை

துப்பாக்கி தவறுதலாக இயங்கியதில் பெண் பொலிஸ் கான்ஸ்டபில் காயம்

Super User   / 2013 மே 06 , பி.ப. 01:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.முசப்பிர்

வென்னப்புவ பொலிஸ் நிலையத்தில் இன்று திங்கட்கிழமை காலை துப்பாக்கி ஒன்று தவறுதலாக இயங்கியதில் பெண் பொலிஸ் கான்ஸ்டபில் ஒருவர் காயமடைந்து மாராவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் கான்ஸ்டபில் ஒருவர் அவரிடமிருந்த துப்பாக்கியை பரிசீலித்துக் கொண்டிருந்த போது தவறுதலாக அத்துப்பாக்கி இயங்கியுள்ளது. இவ்வாறு துப்பாக்கி இயங்கியதால் அங்கிருந்த பெண் பொலிஸ் கான்ஸ்டபில் ஒருவரின் காலில் வெடி பட்டு அப்பெண் பொலிஸ் கான்ஸ்டபில் காயங்களுக்குள்ளானார்.

பின்னர் அவர் மாராவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X