2025 மே 21, புதன்கிழமை

ஹொரவப்பொத்தானை நகரில் அபிவிருத்திப் பணிகள்

Suganthini Ratnam   / 2013 மே 07 , மு.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

ஹொரவப்பொத்தானை நகரத்தை முழுமையாக அபிவிருத்தி செய்து சுற்றுலாத்துறை தலமாக மாற்றும் நோக்கில் 30 கோடி ரூபா செலவில் பாரிய அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கவுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார்.

ஜனாதிபதியின் ஆலோசனைப்படி பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் இந்த அபிவிருத்தித் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

வெள்ளப்பெருக்கினால் நகரத்தை பாதுகாக்கும் நோக்கில் ஹொரவப்பொத்தானை நகரத்திலுள்ள வீதியினை 10 அடி வரை உயர்த்துதல், வாய்க்கால்களை அமைத்தல், நகரப் பகுதியில் 3 புதிய பாலங்களை அமைத்தல், கழிவுநீரை வெளியேற்றும் நோக்கிலான வடிகான்களை அமைத்தல், வாகன தரிப்பிடமொன்றை அமைத்தல், நகரை அலங்கரித்தல் உள்ளிட்ட பல அபிவிருத்திப் பணிகளுக்காக 26 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், ஹொரவப்பொத்தானை நகரத்தில் 650 கடைத் தொகுதிகளைக் கொண்ட சந்தையொன்றை  அமைத்தல், சந்தைப் பகுதியில் வாகனத் தரிப்பிடமொன்றை அமைத்தல், சந்தைப் பகுதியில் குடிநீர், மலசலகூடம் ஆகிய வசதிகளை ஏற்படுத்துவதற்காக 2.5 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, ஹொரவப்பொத்தானையில் 3000 ஏக்கரில் யானைகள் காப்பரண்  அமைக்கும் பணிகளும் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த முதற்கட்டப் பணிகள் யாவற்றையும் எதிர்வரும் 3 மாதங்களுக்குள் நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X