2025 மே 21, புதன்கிழமை

சிலாபம் - கொழும்பு தனியார் பஸ்கள் பணிப்பகிஷ்கரிப்பு

Suganthini Ratnam   / 2013 மே 08 , மு.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.ஹிஜாஸ்

சிலாபத்துக்கும் கொழும்புக்கும் இடையில் தனியார் போக்குவரத்துச் சேவையில்  ஈடுபட்டுவருகின்ற பஸ் வண்டிகள் இரண்டாவது நாளாக இன்று புதன்கிழமையும் சேவையில் ஈடுபடவில்லை.

வடமாகாணத்திலிருந்து புத்தளம், சிலாபம் ஊடாக கொழும்புக்குச் செல்லும் பஸ் வண்டியின் நடத்துனர் ஒருவர் சிலாபம் - கொழும்பு வீதியில் செல்லும் பஸ் வண்டி நடத்துனர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.  இதனைத் தொடர்ந்தே  இந்த வேலைநிறுத்தம் நேற்று செவ்வாய்க்கிழமையிலிருந்து இடம்பெற்றுவருவதாக பொலிஸார்; தெரிவித்தனர்.

இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய பஸ் நடத்துனரை கைதுசெய்யும்வரை இந்த வேலைநிறுத்தம் தொடரும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

வடமாகாணத்திலிருந்து சிலாபம் ஊடாகச் செல்லும் பஸ் வண்டிகளுக்கு குறிப்பிட்ட பஸ் தரிப்பிடங்களில் மாத்திரமே பயணிகளை ஏற்றுவதற்கு அனுமதியுள்ளது. இருப்பினும் ஏனைய பஸ் தரிப்பிடங்களிலும் பயணிகளை ஏற்றியது தொடர்பிலேயே இந்தப் பிரச்சினை ஏற்பட்டதாகவும் பொலிஸார் கூறினர். 

இதேவேளை, இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X