2025 மே 21, புதன்கிழமை

'விதானையின் குருட்டுக்காதல்'

Kanagaraj   / 2013 மே 08 , பி.ப. 09:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

60 வயதான ஓய்வு பெற்ற கிராம சேவகர் (விதானை) ஒருவர் 17 வயது பாடசாலை மாணவிக்கு காதல் கடிதம் கொடுத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

அனுராதபுரம் கலபிந்துனுவௌ பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. காதலை வெளிப்படுத்தியதாக கூறப்படும்  அந்த கிராமசேவகரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது அவரை இன்று வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு அனுராதபுரம் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

'சந்தேகநபரான ஓய்வு பெற்ற குறித்த கிராமசேவகர் அந்த பெண்ணின் வீட்டுக் சென்றுள்ளார். குறித்த வீட்டில் முதியவர்கள் இல்லாததை கண்டுக்கொண்ட அவர் வீட்டிலிருந்த 17 வயதான பாடசாலை மாணவியிடம் குடிப்பதற்கு ஒரு கிளாஸ் தண்ணீர் கேட்டுள்ளார்.

யுவதி கொண்டுவந்த தண்ணீரையும் குடித்துவிட்டு கடதாசி ஒரு துண்டொன்றையும் கேட்டுள்ளார். அந்த கடதாசியிலேயே தனது விருப்பத்தை தெரிவிக்கும் அந்த 'மூன்றெழுத்தை' எழுதி கொடுத்துவிட்டு வீட்டுக்கு திரும்பியுள்ளார்.

என்ன செய்வதென்று தெரியாத யுவதி கிராமசேவகர் கொடுத்த அந்த கடதாசியை தனது தந்தை வீட்டுக்கு திரும்பியதும் அவரிடம் கொடுத்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் தந்தை பொலிஸில் செய்த முறைப்பாட்டையடுத்தே கிராமசேவகர் பாலியல் துன்புறுத்தல் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X