2025 மே 21, புதன்கிழமை

புத்தளம் பிரதேசத்தில் ஸ்ரீலங்கா ரெலிகொம் வலையமைப்பு சேவைகள் பாதிப்பு

Super User   / 2013 மே 09 , மு.ப. 07:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எப்.ஜெஸீரா

புத்தளம் பிரதேசத்தில் ஸ்ரீலங்கா ரெலிகொம் வலையமைப்பு சேவைகள் அனைத்தும் கடந்த மூன்று தினங்களாக செயல் இழந்துள்ளன.

இதனால் ஸ்ரீலங்கா டெலிகோம் வலையமைப்பினூடாக புத்தளம் பகுதிகளிலுள்ள அரச, தனியார் நிறுவனங்கள், வர்த்தக நிலையங்கள் என்பனவற்றின் வாடிக்கையாளர்கள் கடந்த மூன்று நாட்களாக பெரிதும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

தொழிநுட்பத்தில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாகவே ஸ்ரீலங்கா ரெலிகொமின் அனைத்து தொடர்புகளும் செயலிலந்துள்ளதாக ஸ்ரீலங்கா டெலிகொமின் புத்தளம் கிளையின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இதனால் புத்தளம், சிலாபம், மாராவில, கற்பிட்டி ஆகிய பகுதிகளில் டெலிகொமின் அனைத்து சேவைகளும் பாதிப்படைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, கொழும்பிலிருந்து தொழிநுட்ப அதிகாரிகள் இன்றைய தினம் வருகை தரவுள்ளதுடன், இன்று அல்லது நாளை தமது சேவை வழமைக்கு திரும்பிவிடும் என்றும் அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X