2025 மே 21, புதன்கிழமை

ஜெயம்பதி பந்துராஜா, தனது ஆதரவாளர்களுடன் சுதந்திர கட்சியில் இணைவு

A.P.Mathan   / 2013 மே 11 , மு.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம். ஹிஜாஸ்
 
புத்தளம் பிரதேச சபையின் சுயேட்சை குழு உறுப்பினரும், பிரதேச சபையின் முன்னாள் தலைவருமான ஜெயம்பதி பந்துராஜா, தனது ஆதரவாளர்கள் பலருடன் நேற்று வெள்ளிக்கிழமை சுதந்திர கட்சியில் இணைந்து கொண்டார். 
 
அமைச்சர் பிரியங்கர ஜெயரத்தனவின் வீட்டில் நடைப்பெற்ற நிகழ்வொன்றில் சுதந்திர கட்சிக்கான அங்கத்துவத்தினை அமைச்சர் பிரியங்கர ஜெயரத்னவிடமிருந்து புத்தளம் பிரதேச சபை உறுப்பினரும், அவரின் ஆதரவாளர்களும் பெற்றுக்கொண்டனர்.
 
ஜனாதிபதி மேற்கொண்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள் தன்னை கவர்ந்துள்ளதாகவும் எனவே நாட்டினதும், பிரதேசத்தினதும் அபிவிருத்தியில் பங்கேற்பதற்காக சுதந்திர கட்சியில் இணைந்து கொண்டதாக பிரதேச சபை உறுப்பினர் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X