2025 மே 21, புதன்கிழமை

தனியார் பஸ்களில் கப்பம் பெற்ற அதிகாரிகளுக்கு இடமாற்றம்

A.P.Mathan   / 2013 மே 11 , பி.ப. 01:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்
 
அநுராதபுரம் புதிய பஸ் தரிப்பிடத்திலுள்ள தனியார் பஸ் வண்டிகளில் கப்பம் பெற்ற அதிகாரிகளை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அநுராதபுரம் வீதிப் போக்குவரத்து அதிகார சபையின் பிரதான காரியாலயத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 
 
இந்த இடமாற்றங்களை வடமத்திய மாகாண வீதிப் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் டப்ளியு. எம். பீ. பீ. விஜேசூரிய வழங்கியுள்ளார்.
 
இதேவேளை அதிகாரிகளுக்கு கப்பம் வழங்கும் தனியார் பஸ் வண்டிகளின் வீதிப் போக்குவரத்து அனுமதிப் பத்திரத்தினை இரத்துச் செய்வதாகவும், கப்பம் பெறும் நடவடிக்கைகள் தொடர்பாக தனக்கு தெரியப்படுத்துமாறும் அவர் கேட்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X