2025 மே 21, புதன்கிழமை

விபத்தில் குடும்பஸ்தர் பலி

Kanagaraj   / 2013 மே 13 , மு.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எப்.ஜெஸீரா,எம்.என்.எம். ஹிஜாஸ்

புத்தளம் பாலாவி நாகவில் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று திங்கட்கிழமை அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில் நாகவில் எருக்கலம்பிட்டியைச் சேர்ந்த எம்.ஐ.ரம்சீன் (வயது 32) என்பரே உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நேக்கிச் சென்ற வான் ஒன்று இவர் மீது மோதியதில் இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் படுகாயமடைந்த நிலையில் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மரணமாணவரின் சடலம் தற்பொழுது புத்தளம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், வாகன சாரதி கைது செய்யப்பட்டு விசாரணைக்குற்படுத்தப்பட்டுள்ளார்.

இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X