2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

மாறாவில வீதி விபத்தில் ஓமந்தையை சேர்ந்தவர் பலி

Super User   / 2013 மே 13 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.ஹிஜாஸ்

மாறாவில, முஹூதுகட்டுவ பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் ஓமந்தையை சேர்ந்தவர் பலியாகியுள்ளார். இவர் 56 வயதுடைய குடும்பஸ்தர் என பொலிஸார் தெரிவித்தனர். 

வத்தளையிலிருந்து பிங்கிரிய நோக்கி சென்ற லொறியும் வேனொன்றும் நேருக்கு நேர் மோதியதினாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. 
 
இதன்போது மேலும் இருவர் சிறு காயங்களுக்குள்ளானதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.உயிரிழந்தவரின் சடலம் சிலாபம் பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரனைகளை மாறாவில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X