2025 மே 21, புதன்கிழமை

ஹோட்டல் முகாமைத்துவம் தொடர்பான செயலமர்வு

Suganthini Ratnam   / 2013 மே 15 , மு.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எஸ்.எப்.ஜெஸீரா


அரசாங்கத்தால் எதிர்காலத்தில் சுற்றுலா வலயமாக பிரகடனப்படுத்தப்படவுள்ள புத்தளம், கற்பிட்டி பிரதேசத்தின் சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவம் தொடர்பில் தெளிவுபடுத்தும் விசேட செயலமர்வு  நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கற்பிட்டி பிரதேச சபைத் தலைவர் எம்.எச்.எம்.மின்ஹாஜின் அழைப்பின் பேரில் கற்பிட்டி தானியா ஹோட்டலில் நடைபெற்ற இந்தச் செயலமர்வில் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் சுற்றுலாப் பிரிவுக்கான உதவிச் செயலாளர் எம்.ஜே.எம்.இப்ஹாம் உட்பட கற்பிட்டி பிரதேச சபை ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், மத குருமார்கள், பொலிஸ் அதிகாரிகள் எனப் பலரும் இதில் கலந்து கொண்டனர்.

இதன்போது கற்பிட்டி, முகத்துவாரம், கண்டக்குழி, தில்லடி ஆகிய பகுதிகளில் சுற்றுலா ஹோட்டல்களை நடத்தும் ஹோட்டல் உரிமையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது. சில பிரச்சினைகளுக்கு அவ்விடத்திலேயே தீர்வு காணப்பட்டது.

அத்துடன், சுற்றுலா அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் எதிர்காலத்தில் கற்பிட்டியில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் பற்றியும் இங்கு வருகை தந்த பிரதி அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் சுற்றுலாப் பிரிவுக்கான உதவிச் செயலாளர் ஆகியோரினால் விளக்கமளிக்கப்பட்டன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X