2025 மே 21, புதன்கிழமை

பாலியல் குற்றச்சாட்டில் முன்னாள் இராணுவ வீரருக்கு சிறை

Suganthini Ratnam   / 2013 மே 15 , மு.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

பெண் ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டு வழக்கில் முன்னாள் இராணுவ வீரர் ஒருவரை குற்றவாளியாக இனங்கண்ட நீதிமன்றம் குற்றவாளிக்கு 10 வருட கடூழியச் சிறைத் தண்டணை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இந்த வழக்கு அநுராதபுரம் மேல் நீதிமன்ற நீதவான் மேனகா விஜேசுந்தர முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே நீதவான் மேற்கண்டவாறு தீர்ப்பளித்தார்.

அதற்கு மேலதிகமாக 20 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டதோடு இதனைச் செலுத்தத் தவறும் பட்சத்தில் மேலும் 5 வருட சிறைத் தண்டணையை அனுபவிக்க வேண்டி வரும் என்றும் நீதவான் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

1999ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த திகதியொன்றில் சந்தேக நபர் கல்கிரியாகம பகுதியிலுள்ள பெண்ணொருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியிருந்தார்.

இது தொடர்பான வழக்கு விசாரணை அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்த நிலையிலேயே தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X