2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

முந்தல், ஆராச்சிக்கட்டுவ பிரதேசங்களில் கடலரிப்பு

Suganthini Ratnam   / 2013 மே 15 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.என்.எம்.ஹிஜாஸ்


புத்தளம் மாவட்டத்தின் முந்தல், ஆராச்சிக்கட்டுவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கடற்கரையோரப் பகுதிகள் கடலரிப்புக்குள்ளாகி வருகின்றன.

கடந்த சில நாட்களாக புத்தளம் மாவட்டத்தின் கடற்கரையோர பகுதிகளில் வீசி வரும் கடும் காற்றை தொடர்ந்தே இப்பகுதிகள் கடலரிப்புக்குள்ளாகி வருகின்றன. 

உடப்பு, முக்குத்தொடுவாவ, கருக்குபனை ஆகிய கரையோரப் பகுதிகளிலேயே  கடலரிப்பு இடம்பெறுகின்றன.

இக்கடலரிப்பினை தடுப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அபிவிருத்திச் சங்க மற்றும் மீனவர் சங்கங்களின் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X