2025 மே 21, புதன்கிழமை

கேரளா கஞ்சா கடத்தியவர் கைது

Super User   / 2013 மே 15 , பி.ப. 01:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.ஹிஜாஸ்

கற்பிட்டி பிரதேசத்தில் கேரளா கஞ்சா கடத்திய குற்றச்சாட்டில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த சனிக்கிழமை 59 கிலோகிறாம் கேரளா கஞ்சா மற்றும் 54,610 'பான்பராக்' பாபுல் பக்கட் என்பன கற்பிட்டி, பெரிய அரிச்சல் தீவில் கடற்படையினரால் மீட்கப்பட்டதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டு கல்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

இதனையடுத்து கற்பிட்டி பொலிஸார் மேற்கொண்ட தொடர் விசாரனையினையடுத்து இன்று அதனுடன் தொடர்புடைய இன்னுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கற்பிட்டி பொலிஸார் தொடர்ந்து விசாரனைகளினை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X