2025 மே 21, புதன்கிழமை

கிணற்றில் விழுந்த சிறுவன் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2013 மே 16 , மு.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

மிஹிந்தலை பகுதியில் குளிப்பதற்குச் சென்ற சிறுவன் ஒருவன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளான்.

மிஹிந்தலை, போகஸ்யாய பகுதியைச் சேர்ந்த 8ஆம் தரத்தில் கல்வி கற்கும் சிறுவனே நேற்று புதன்கிழமை இவ்வாறு உயிரிழந்துள்ளதாக மிஹிந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.

தனது வீட்டுக்கு அருகில் உள்ள கிணற்றில் குளிப்பதற்குச் சென்ற இந்தச் சிறுவன், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததைத் தொடர்ந்து இவனை  பெற்றோர் தேடி கிணற்றடிப்; பக்கம் சென்றுள்ளனர்.

இதன்போது இந்தச் சிறுவன் கிணற்றில் விழுந்துள்ளதை கண்ட நிலையில், கிணற்றிலிருந்து சடலம்  மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X