2025 மே 21, புதன்கிழமை

யானை தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2013 மே 17 , மு.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.என்.எம்.ஹிஜாஸ்


கருவலகஸ்வெவ பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட  புளியங்குளம் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குபுக்கல, இஹல புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த  06 பிள்ளைகளின் தந்தையான பி.எச்.பி.புஞ்சிலால் (வயது 66)  என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தனது மகளின் வீட்டுக்கு பின்புறமாக உள்ள தனது தோப்பில் தென்னங்கன்றுகளை காட்டு யானைகளிடமிருந்து பாதுகாப்பதற்காக இந்தத் தோப்பில் உள்ள கொட்டிலில் நேற்று வியாழக்கிழமை இரவு வேளையிலிருந்து இவர் காவல் இருந்துள்ளார்.  இதன்போது அங்கு வந்த காட்டு யானையை துரத்த முற்பட்ட வேளையிலேயே இவரை யானை தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரணையை சாலியவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X