2025 மே 21, புதன்கிழமை

தலையில் ஏறிய கம்பியை வெற்றிகரமாக அகற்றிய வைத்தியர்கள்

A.P.Mathan   / 2013 மே 18 , மு.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்
 
14 வயதுடைய மாணவன் ஒருவனுடைய தலையில் ஏறிய இரும்புக் கம்பியை சத்திர சிகிற்சை மூலம் அகற்றும் பணியில் தம்புள்ளை வைத்தியசாலையின் வைத்திய அதிகாரிகள் நேற்று வெள்ளிக்கிழமை வெற்றி கண்டனர்.
 
சீகிரிய, திகம்பதஹ மஹா வித்தியாலயத்தின் 9ஆம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவன் ஒருவரின் தலையிலேயே இவ் இரும்புக் கம்பி ஏறி இருந்தது. பாடசாலையின் மணியை வேறு ஒரு மாணவன் அடிக்கும்போது அதன் இரும்புக் கம்பி உடைந்து இவருடைய தலையில் விழுந்துள்ளதுடன் உடன் தம்புள்ளை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் வைத்தியர்கள் மேற்கொண்ட முயற்சியினால் சத்திர சிகிற்சை மூலம் அவரது தலையிலிருந்து இரும்புக் கம்பி அகற்றப்பட்டதுடன் மேலதிக சிகிற்சைக்காக மாணவனை கண்டி போதனா வைத்தியசாலைக்கு மாற்றியுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X