2025 மே 21, புதன்கிழமை

தொழு நோய் கண்டறியும் வைத்திய முகாம்

Kogilavani   / 2013 மே 20 , மு.ப. 08:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.என்.எம்.ஹிஜாஸ்


புத்தளம் பிரதேச செயலகம் மற்றும் புத்தளம் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் என்பன இணைந்த ஏற்பாடு செய்த தொழு நோய் கண்டறியும் வைத்திய முகாம் புத்தளம் தம்மபண்ணி பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை நடைப்பெற்றது.

தம்மபண்ணி பிரதேசத்தில் சுமார் 50 வரையிலான தொழு நோயாளர்கள் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

தற்போது இந் நோயினை குணப்படுத்த மருந்துகள் இருந்த போதும் நோய் தொற்றுக்குள்ளானவர்கள் உரிய முறையில் சிகிச்சைக்கு செல்லாமையினால் அந் நோய் மேலும் பரவக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளது.

எனவேதான் கிராமத்திற்குள்ளே இந்த முகாம் நடாத்தப்படுவதாகவும் இதன்போது மேலும் பலருக்கும் இந்நோய் தொடர்பில் பரிசீலனை செய்யப்பட்டதாகவும் பொது சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

இவ் வைத்திய முகாமில் பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X