2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

புத்தளத்தில் மீள்வரி மதிப்பீட்டு நடவடிக்கைகள் ஆரம்பம்

Menaka Mookandi   / 2013 மே 20 , பி.ப. 12:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம். ஹிஜாஸ்

புத்தளம் நகர சபையின் எல்லைக்குட்பட்ட காணி மற்றும் கட்டிடங்களுக்கான மீள்வரி மதீப்பீட்டு நடவடிக்கைகள் இன்று திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

5 வருடங்களுக்கு ஒருமுறை நடைப்பெறும் இந்த மீள்வரி மதீப்பீட்டு நடவடிக்கைகளினை மதிப்பீட்டு திணைக்களத்தின் குருநாகல் பணியக அதிகாரிகள் மேற்கொள்ளுவார்கள். இதன்போது காணி, கடை, வீடு என்பனவற்றுக்கான வரி மீள் மதிப்பீடு செய்யப்படுமென புத்தளம் நகர சபை தெரிவித்துள்ளது.

இவ்வரி மீள் மதிப்பீட்டு நடவடிக்கையின் போது உரிய தகவல்களினை சரியான முறையில் அதிகாரிகளுக்கு வழங்குவதன் மூலம் எதிர்காலத்தில் ஏற்படும் சிரமங்களினை தவிர்த்துக்கொள்ளலாம் எனவும் புத்தளம் நகரசபை மேலும் அறிவித்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X