2025 ஜூலை 07, திங்கட்கிழமை

பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டாமெனக் கூறிய ஆசிரியர்கள் மீது சட்ட நடவடிக்கை

Suganthini Ratnam   / 2013 மே 23 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

அநுராதபுரத்தில் கடந்த 21ஆம் திகதி சில பாடசாலைகளில்  மாணவர்களை பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டாம் என கூறிய சில ஆசிரியர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மின் கட்டண உயர்விற்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த 21ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட வேலைநிறுத்த போராட்டத்தின்போது மாணவர்களை பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டாம் என சில ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.

இது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்ககை எடுக்கப்படும் என அநுராதபுரம் வலயக் கல்விப் பணிப்பாளர் கே.அபேசுந்தர தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .