2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

புதையல் தோண்டிய எழுவர் கைது

Kanagaraj   / 2013 மே 23 , பி.ப. 01:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம். ஹிஜாஸ், ஹிரான் பிரியங்கர

வில்பத்து சரணலாய பகுதியிலுள்ள பொன்பரப்பி, பள்ளிவாசல் குளம் காட்டு பகுதியில் புதையல் தோண்டிய 7 பேர் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரானுவத்தின் கொமாண்டோர் பிரிவும், வனவள விசேட பிரிவும் இனைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பினை மேற்கொண்டனர். இதன் போது புதையல் தோண்டிக்கொண்டிருந்த 07 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கம்பஹா, மினுவாங்கொடை மற்றும் எளுவன்குளம் பகுதிகளினை சேர்ந்தவர்களென வனஜீவராசி திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதையல் தோன்டிய இடம் தொல் பொருள் காணப்படும் இடமென சந்தேகிப்பதாகவும், கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரனைகள் நடைப்பெற்று வருவதாகவும், விசாரனையின் பின்னர் இவர்களை புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் தினைக்கள அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X