2025 மே 21, புதன்கிழமை

மருத்துவ மாணவர் இந்து மன்றத்தின் மருத்துவ முகாம்

A.P.Mathan   / 2013 மே 25 , மு.ப. 08:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.என்.எம்.ஹிஜாஸ்
 
கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ மாணவர் இந்து மன்றத்தின் ஏற்பாட்டில் உடப்பு பிரதேச மாணவர்களுக்கு இலவச மருத்துவ முகாமும், மருத்துவ அறிவூட்டல் நிகழ்வும் ஆண்டிமுனை தமிழ் மகா வித்தியாலயத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைப்பெற்றது.
 
இம் மருத்துவ முகாமிலும், அறிவூட்டல் நிகழ்விலும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டனர். இதன்போது கண் பரிசோதனை நிகழ்வும் நடைபெற்றது.
 
உடப்பு தமிழ் வித்தியாலயம் மற்றும் ஆண்டிமுனை தமிழ் மகா வித்தியாலயம் மாணவர்கள் இவ் மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
 
டெங்கு, தொற்று நோய்கள் பரவும் முறை, அவற்றின் அறிகுறிகள், தடுப்பு முறைகள் என்பனவற்றுடன் சுகாதார பழக்கவழக்கங்கள் தொடர்பிலும் மாணவர்களுக்கு இதன்போது அறிவுறுத்தப்பட்டது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X