2025 மே 20, செவ்வாய்க்கிழமை

வீட்டுக்குள் கார் புகுந்து விபத்து: தாயும் மகளும் பலி

Kanagaraj   / 2013 மே 29 , மு.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

காரொன்று வீதியை விட்டு விலகி வீட்டு விறாந்தையில் விழுந்து விபத்துக்குள்ளானதில் தாயும்,மகளும் பலியாகியுள்ளனர்.

இந்த சம்பவம் கண்டி-குருணாகல் வீதியில் கஹகொல்ல சந்தியிலேயே இன்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.

விறாந்தையிலிருந்த 47 வயதான தாயும் ஒன்பது வயதான மகளும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அவ்விருவரும் உயிரிழந்து விட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, காரை செலுத்தி சென்ற சாரதியையும் கைது செய்துள்ளதாக தெரிவித்த குருணாகல் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக தெரிவித்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X