2025 மே 20, செவ்வாய்க்கிழமை

தபோவ கிராமிய வைத்தியசாலை மூடப்பட்டது

Kogilavani   / 2013 மே 30 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


எம்.என்.எம். ஹிஜாஸ், ஹிரான் பிரியங்கர


புத்தளம், தபோவ கிராமிய வைத்தியசாலை கடந்த செவ்வாய்க்கிழமை முதல் மூடப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த வைத்தியசாலையின் வைத்தியரின் விடுதிக்கு அசீட் வீசப்பட்டதுடன், மலம் வீசப்பட்டு அசுத்தப்படுத்தப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து விடுதியிலிருந்த வைத்தியர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

இதனால், வைத்தியசாலையின் வார்ட் தொகுதிகளிலிருந்து நோயாளர்களும் வெளியேறியுள்ளனர்.

இதேவேளை, வெளிநோயாளர் பிரிவும் இயங்காததினால் சிகிச்சைபெற வந்த நோயளர்களும் திரும்பி செல்கின்றனர்.

இதனால் இப்பகுதி மக்கள் மருத்துவ வசதியின்றி பெரும் அசௌகரியத்துக்கு உள்ளாகியுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X