2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

துப்பாக்கிசூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணை

Kogilavani   / 2013 ஜூன் 01 , மு.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.என்.எம். ஹிஜாஸ்

நபர் ஒருவரின் இடதுகாலில் ஏற்பட்ட துப்பாக்கி சூட்டுக்காயம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

புத்தளத் தள வைத்தியசாலையில் நபர் ஒருவர் துப்பாக்கிச்சூட்டு காயம் ஏற்பட்ட நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நில்மலபுர, தழுவ பிரதேசத்தினை சேர்ந்த 32 வயதுடைய பிரியங்கர குமார எனும் நபரே இவ்வாறு துப்பாக்கி சூட்டுகாயத்துடன் நேற்று வெள்ளிக்கிழமை புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் தனது வீட்டில் இருந்தபோது துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகியதாகவும், தனக்கு எவ்வாறு துப்பாக்கியினால் சுடப்பட்டது என தெரியாது எனவும் அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் விசாரனைகளினை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X