2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

உடப்பு சுனாமி எச்சரிக்கை கோபுர செயற்பாடுகள் இடைநிறுத்தம்

Suganthini Ratnam   / 2013 ஜூன் 02 , மு.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.மும்தாஜ்

உடப்பு பகுதியில் தொழில்நுட்பக் கோளாறினால் தவறுதலாக ஒலித்த சுனாமி எச்சரிக்கை கோபுரத்தின் செயற்பாடுகளை   தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. 

இந்த சுனாமி எச்சரிக்கை கோபுரம் நேற்று சனிக்கிழமை காலை 10.21 மணியளவில் திடீரென்று 2 தடவைகள் ஒலித்தன. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இக்கோபுரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இவ்வாறு ஒலி; எழும்பியதாக பின்னர் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து இச்சுனாமி எச்சரிக்கை கோபுரத்தின் செயற்பாட்டை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ள புத்தளம் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள்,  திருத்த வேலைகளையும் ஆரம்பித்துள்ளனர்.

இக்கோபுரத்தின் செயற்பாடுகளை திருத்த வேலைகளுக்காக தற்காலிமாக இடைநிறுத்தப்பட்டுள்ள இக்காலப்பகுதியில், ஏதாவது அவசர நிலைமைகள் ஏற்படுமாயின் அது பற்றி கடற்படையினர், பொலிஸார் உட்பட பிரதேசத்தில் இயங்கும் மீனவச் சங்கங்களின் ஒத்துழைப்பை பெற்று  மாற்று வழிகளைக் கையாண்டு பிரதேச மக்களுக்கு அறிவித்தல் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படுமெனவும்  புத்தளம் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .