2025 ஜூலை 07, திங்கட்கிழமை

ஆயுதங்களுடன் ஐவர் கைது

Kanagaraj   / 2013 ஜூன் 03 , பி.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம். ஹிஜாஸ்

உள்நாட்டு துப்பாக்கிகள் மற்றும் கைக்குண்டு என்பவற்றுடன் ஐந்து பேரை  சிலாபம் மற்றும்  மாதம்பை பொலிசார்  இணைந்து சந்தேகத்தின் பேரில்இன்று கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மாதம்பை மற்றும் ஹம்பாந்தோட்டை பிரதேசங்களை சேர்ந்தவர்களெனவும், கடந்த மே மாதம் 21 ஆம் திகதி மாதம்பை, கீனகொல்லவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற கொலையுடன் தொடர்புடையவர்களெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த கொலை சம்பவம் தொடர்பில் விசாரனை நடாத்திவருகின்ற மாதம்பை பொலிஸார் இவர்களை மாதம்பையில் வைத்தே கைது செய்துள்ளதாக அறிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் கொலைக்கு பயன்படுத்தப்பட்தாக கூறப்படும் துப்பாக்கிகளுக்குரிய தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளன. ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டது தொடர்பில் மாதம்பை பொலிஸார் தொடர்ந்து விசாரனைகளினை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .