2025 ஜூலை 07, திங்கட்கிழமை

கஞ்சாவுடன் பெண் கைது

Kanagaraj   / 2013 ஜூன் 05 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம். ஹிஜாஸ்

முக்குத்தொடுவாவ, கஜுவத்த பிரதேசத்திலுள்ள வீடொன்றில்; கஞ்சா போதைப்பொருள் விற்பனையில் நீண்டகாலமாக ஈடுப்பட்டுவந்ததாக கூறப்படும்  பெண்ணொருவரை முந்தல் பொலிஸார்  இன்று கைது செய்துள்ளனர்.

முந்தல் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன்  விற்பனைக்கு தயாராக வைக்கப்பட்டிருந்த 20 பக்கட்கள் கஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட பெண்ணிடம் விசாரனைகள் தொடர்ந்து நடைப்பெறுவதாகவும், புத்தளம் நீதிமன்றத்தில் குறித்த பெண்ணை நாளை ஆஜர் படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்  பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .