2025 ஜூலை 07, திங்கட்கிழமை

வீடுகள் கையளிப்பு

Kogilavani   / 2013 ஜூன் 07 , மு.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


எம்.என்.எம். ஹிஜாஸ்


ஹொல்சிம் நிறுவனத்தினால் புத்தளத்தில் அமைக்கப்பட்ட 15 வீடுகள் நேற்று வியாழக்கிழமை மாலை உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டன.

புத்தளம் நகர சபைத் தலைவர் கே.ஏ.பாயிஸின்  வேண்டுகோளுக்கினங்கவும் புத்தளம் மாவட்ட செயலாளர் கிங்ஸிலி பெர்ணாண்டோவின் ஆலோசனைக்கமையவும் இவ் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டன.

சுமர் 8.5 மில்லியன் செலவில் நிர்மாணக்கப்பட்டுள்ள இவ் வீடுகள் அமைந்துள்ள தொகுதிக்கு ஹொல்சிம் சுபிரி கிராமம் என பெயரிடப்பட்டுள்ளது.
புத்தளம் நகர சபையில் பணியாற்றும் மூவினங்களினையும் சேர்ந்த தொழிலாளர்களுக்கு இவ் வீடுகள் கையளிக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் வடமேல் மாகாண அமைச்சர் சனத் நிசாந்த பெரேரா, வடமேல் மாகாண சபை உறுப்பினர் சிந்தக மாயாதுக்க, புத்தளம் நகர சபைத் தலைவர் கே.ஏ. பாயிஸ், ஹொல்சிம் நிறுவனத்தின் ஆசிய பிராந்தியத்துக்கு பொறுப்பாளரும், நிறுவனத்தின் உப தலைவருமான எடம் லயினம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .