2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

மரமுந்திரிகையிலிருந்து பானம் தயாரிக்கும் தொழிற்சாலை

Kogilavani   / 2013 ஜூன் 08 , மு.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


எம்.என்.எம். ஹிஜாஸ், ஹிரான் பிரியங்கர


புத்தளத்தில் மரமுந்திரிகையிலிருந்து பானம் தயாரிக்கும் தொழிற்சாலை நிர்மாணிக்கப்படவுள்ளது. இதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர்  ரெஜினோல்ட் குரே தெரிவித்தார்.

புத்தளம் மாவட்ட மரமுந்திரிகை செய்கையாளர்களுக்கு மானியம் வழங்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை மாலை புத்தளம் பிஸ்ருல் ஹாபி ஞாபகர்த்த மண்டபத்தில் நடைப்பெற்ற போதே அமைச்சர் ரெஜினோல்ட் குரே இவ்வாறு தெரிவித்தார்.

'இத்தொழிற்சாலை அமைக்கப்பட்டதும் மரமுந்திரகை பழத்துக்கும் அதிகளவான கேள்விகள் ஏற்படும். இதனால் மரமுந்தரிகை செய்கையாளர்கள் இரட்டிப்பு நன்மையடைவர்' எனவும் அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் சிரேஷ்ட அமைச்சர் மில்ரோய் பெர்ணான்டோ, புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விக்டர் அன்டனி மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X