2025 ஜூலை 07, திங்கட்கிழமை

வைத்தியரின் விடுதிக்கு அசிட் வீச்சு; சந்தேகத்தில் இருவர் கைது

Suganthini Ratnam   / 2013 ஜூன் 09 , மு.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.ஹிஜாஸ்

புத்தளம், தவ்போவ வைத்தியசாலையின் வைத்தியரின் விடுதிக்கு அசிட் வீசிய சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கருவெலகஸ்வெவ பிரதேச சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் ஒருவர் உட்பட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கருவெலகஸ்வெவ பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து இந்த  சந்தேக நபர்கள் இருவரையும் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கைதுசெய்துள்ளதாகவும் இவர்களிடம் தொடர்ந்து விசாரணைகள் நடைபெறுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் குறித்த வைத்தியரின்  விடுதிக்கு அசிட் வீசப்பட்டதைத் தொடர்ந்து குறித்த வைத்தியர் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த வைத்தியசாலையும் இயங்காதுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .