2025 ஜூலை 07, திங்கட்கிழமை

சீரற்ற காலநிலையால் இலந்தையடி பிரதேசத்தில் கடும் கடலரிப்பு

Kogilavani   / 2013 ஜூன் 09 , மு.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


எம்.என்.எம். ஹிஜாஸ், ஹிரான் பிரியங்கர


சீரற்ற காலநிலையை தொடர்ந்து கற்பிட்டி, இலந்தையடி பிரதேசம் கடும் கடலரிப்புக்குள்ளாகியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

வழமைக்கு மாறாக சுமார் 30 மீற்றர் வரை கடலலை எல்லையினை தாண்டி முன்னோக்கி வந்துள்ளதாகவும் இதனால், கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்து சொரூபம் இடிந்து வீழ்ந்துள்ளதாகவும் பிரதேச மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, கடும் காற்றுக்  காரணமாக கற்பிட்டி கடலில் தரித்து நிறுத்தியிருந்த  படகுகளினை கரைக்கு அப்பால் பாதுகாப்பாக தள்ளிச்சென்றபோது அதில் ஒரு படகு கவிழ்ந்ததில் மீனவர் ஒருவர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .