2025 ஜூலை 07, திங்கட்கிழமை

காதணியை களவாடிய குற்றச்சாட்டில் முன்னாள் இராணுவ வீரர் கைது

Suganthini Ratnam   / 2013 ஜூன் 11 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

வீட்டில் தனிமையிலிருந்த 70 வயதான  பெண்ணொருவரை கொலை செய்து அவர் அணிந்திருந்த காதணியை களவாடிச் சென்ற குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் இராணுவ வீரர் ஒருவரை இராஜாங்கனை பொலிஸார் நேற்று திங்கட்கிழமை கைதுசெய்துள்ளனர்.

கடந்த 7ஆம்; திகதி அங்கமுவ பகுதியைச் சேர்ந்த 8 பிள்ளைகளின் தாயாரே  இவ்வாறு கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 40 வயதுடைய முன்னாள் இராணுவ வீரர் ஒருவரே கைதுசெய்யப்பட்டுள்ளதாக இராஜாங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் வீட்டின் யன்னல் வழியாக நுழைந்து வயோதிப பெண்ணை கொலை செய்து 10,000 ரூபா பெறுமதியான காதணியை களவாடிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .