2025 ஜூலை 07, திங்கட்கிழமை

கூட்டுறவுச்சங்க பொது முகாமையாளர் மீது தாக்குதல்

Menaka Mookandi   / 2013 ஜூன் 11 , பி.ப. 01:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.மும்தாஜ்

நாத்தாண்டி பல நோக்குக் கூட்டுறவுச் சங்க பணிப்பாளர் சபை உறுப்பினர் ஒருவரால் தாக்கப்பட்ட நிலையில் அச்சங்கத்தின் பொது முகாமையாளர் மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று செவ்வாய்க்கிழமை பகல்  நாத்தாண்டி பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் அலுவலகத்தில் வைத்தே பொது முகாமையாளர் கடமையில் இருந்த போது இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.  இத்தாக்குதலில்  ஆர்.எம்.பொனேஜூ (வயது 63)  என்பவரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவராவார்.

பல நோக்குக் கூட்டுறவுச் சங்க பணிப்பாளர் சபையினால் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக விசாரித்துக் கொண்டே தன்னை குறித்த பணிப்பாளர் சபை உறுப்பினர் தாக்கியதாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பொது முகாமையாளர் மாராவில பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய குறித்த பணிப்பாளர் சபை அங்கத்தவர் பிரதேசத்தை விட்டு தலைமறைவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் தொடர்பில் மாரவில பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .