2025 ஜூலை 07, திங்கட்கிழமை

அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் ஆராயும் கூட்டம்

Suganthini Ratnam   / 2013 ஜூன் 12 , மு.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.என்.எம்.ஹிஜாஸ்


2014ஆம் ஆண்டு 'தேசத்திற்கு மகுடம்' திட்டத்தின் கீழ், புத்தளம் மற்றும் வண்ணாத்திவில்லு பிரதேச செயலாளர் பிரிவுகளில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் ஆராயும் கூட்டத்தில் பிரதம அதிதியாக  பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ கலந்துகொண்டார்.

மேற்படி இரு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் அரசியல் தலைமைகள், அரசாங்க  அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு விளக்கமளிக்கும் கூட்டம் புத்தளம் பிஸ்ரூல் ஹாபி ஞாபகார்த்த மண்டபத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதன்போது  அமைச்சர் பசில் ராஜபக்ஷ உரையாற்றுகையில்,

'தேசத்திற்கு மகுடம் திட்டத்தின் கீழ், சகல கிராம அலுவலகர் பிரிவுகளிலும் மக்களின் பங்களிப்புடன் உட்கட்டமைப்பு நடவடிக்கைகள் அபிவிருத்தி செய்யப்படும். இதுபோன்று நாட்டின் பொருளாதார அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு குடும்;ப வருமானத்தை அதிகரிக்கும் திட்டங்களும் அறிமுகப்படுத்தப்படும். இந்நிலையில், முதற்கட்டமாக சகல கிராம அலுவலகர் பிரிவுகளிலும் நடமாடும் சேவை நடத்தப்படும். அது மாத்திரமன்றி அரசாங்க அதிகாரிகளூடாக மக்களுக்கு அறிவூட்டல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்' என்றார்.

2014ஆம் ஆண்டுக்குரிய 'தேசத்திற்கு மகுடம்' கண்காட்சி புத்தளம், குருநாகல், கேகாலை மாவட்டங்களை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படவுள்ளது. இதற்கமைய சகல பிரதேச செயலக மட்டங்களிலும் அரசாங்க அதிகாரிகள், அரசியல் தலைமைகள் உள்ளிட்டவர்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டங்கள் தற்போது நடத்தப்பட்டு வருகின்றன.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .