2025 ஜூலை 07, திங்கட்கிழமை

மொரவன்னி பிரதேசத்தில் மரம் அறுக்கும் நிலையம் முற்றுகை

Suganthini Ratnam   / 2013 ஜூன் 12 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பீர்

கருவலகஸ்வெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொரவன்னி பிரதேசத்தில் இரகசியமான முறையில் மேற்கொள்ளப்பட்டுவந்த மரம் அறுக்கும் நிலையமொன்றை இன்று புதன்கிழமை முற்றுகையிட்டுள்ள விசேட அதிரடிப்படையினர், சந்தேகத்தின் பேரில் 5 பேரை கைதுசெய்துள்ளனர்.

இதன்போது அங்கிருந்த பெருமளவிலான மரக்குற்றிகள், மரம் அறுக்கும் இயந்திரங்கள், 2 உழவு இயந்திரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் சந்தேக நபர்களை  கருவலகஸ்வெவ பொலிஸாரிடம் விசேட அதிரடிப்படையினர் ஒப்படைத்துள்ளனர்.

இது தொடர்பான விசாரணையை கருவலகஸ்வெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .