2025 ஜூலை 07, திங்கட்கிழமை

அ.புரத்திலிருந்து மிஹிந்தலைக்கு இலவச புகையிரத சேவை

Kogilavani   / 2013 ஜூன் 14 , மு.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். சீ. சபூர்தீன்           

எதிர்வரும் பொஸன் தினத்தை முன்னிட்டு அநுராதபுரம் மற்றும் மிஹிந்தலைக்கு பயணிக்கும் பக்தர்களின் நன்மை கருதி அனுராதபுரத்திலிருந்து மிஹிந்தலைக்கு இலவச புகையிரத சேவையினை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக
பொஸன் குழுவின் தலைவரும் மாவட்டச் செயலாளருமான மஹிந்த செனவிரத்ன தெரிவித்தார்.

இதன்படி 22, 23, 24ஆம்; திகதிகளில் அநுராதபுரம் - மிஹிந்தலைக்கிடையில் இலவச புகையிரத போக்குவரத்து சேவைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதேவேளை பக்தர்கள் புனித பூமிக்குள் பொலித்தீன் உறைகள், சங்கீத உபரணங்கள், மதுபான வகைகள், புகை பொருட்கள் ஆகியவற்றை கொண்டு வரவேண்டாம் எனவும் புனித பூமிப் பகுதியிலுள்ள மரங்களுக்குக் கீழ் நெருப்புக் கொழுத்துதல், தொல்பொருட்களுக்கு சேதம் ஏற்படும் வகையில் செயற்படல் என்பவற்றை தவிர்த்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .