2025 மே 20, செவ்வாய்க்கிழமை

ஆசிரியை முழந்தாளிடவைத்த மாகாணசபை உறுப்பினருக்கு விளக்கமறியல்

A.P.Mathan   / 2013 ஜூன் 15 , பி.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.மும்தாஜ்
 
நவகத்தேகம, நவோதைய பாடசாலையின் ஆசிரியை ஒருவரை முழந்தாளிடவைத்த வடமேல் மாகாணசபை உறுப்பினர் சரத்குமாரவை எதிர்வரும் திங்கட்கிழமைவரை விளக்கமறியலில் வைக்குமாறு புத்தளம் பதில் நீதவான் எம்.இக்பால் உத்தரவிட்டுள்ளார். இன்று பிற்பகல் குறித்த வடமேல் மாகாண சபை உறுப்பினரை பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
நேற்று வெள்ளிக்கிழமை பகல் நவகத்தேகம இசுறு பாடசாலையில் கல்வி போதிக்கும் ஆசிரியை ஒருவரையே குறித்த வடமேல் மாகாண சபை உறுப்பினர் பாடசாலையினுள் முழந்தாளிட வைத்துள்ளார்.

நேற்று பாடசாலைக்குச் சென்று வடமேல் மாகாணசபை உறுப்பினரின் மகள் அணிந்திருந்த சீறுடை கட்டையாக இருந்ததினால் பாசடாலை ஒழுக்காற்று குழு உறுப்பினராக ஆசிரியை அம்மாணவியை எச்சரித்துள்ளதாகவும், இதனை அம்மாணவி தன் தந்தையிடம் தெரிவித்ததையடுத்து பாடசாலைக்குச் சென்றுள்ள வடமேல் மாகாண சபை உறுப்பினர் குறித்த ஆசிரியையை ஏசி, எச்சரித்து பின்னர் முழந்தாளிட வைத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 
 
பின்னர் குறித்த ஆசிரியை இது தொடர்பில் நவகத்தேகம பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து இன்று சனிக்கிழமை காலை குறித்த வடமேல் மாகாண சபை உறுப்பினர் நவகத்தேகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
 
இச்சம்பவம் தொடர்பில் நவகத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0

  • IBNU ABOO. Saturday, 15 June 2013 04:47 PM

    இவர்கள் போன்ற மகளும் தந்தையும் உள்ள சமுதாயம் இந்த நாட்டிற்கு சாபக்கேடு. அரசியல்வாதிகளுக்கு நாட்டுமக்கள் கொத்தடிமை என்ற நினைப்பா..? இந்த நாடு அவர்கள் பாட்டன் சொத்தா...??

    Reply : 0       0

    faisath Sunday, 16 June 2013 01:33 AM

    யாவருக்கும் சட்டம் ஒன்றுதான்... அது அரசானாலும்சரி அடிமையானாலும் சரி. எமது பொலிஸாருக்கு ஒரு சலுட்..!

    Reply : 0       0

    vallarasu Sunday, 16 June 2013 04:38 PM

    குறைந்தது 3ஆம் வகுப்பு படித்தவர்கள்தான் தேர்தலில் கேட்க வேண்டும் என்ற சட்டத்தை கொண்டு வந்தால் இப்படிச் சம்பவம் இனிமேல் நடக்காது...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X