2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

முழந்தாளிட வைத்த அரசியல்வாதிக்கு கடும் எதிர்ப்பு

Kogilavani   / 2013 ஜூன் 17 , மு.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஆர்.ரஞ்சன்,  எம்.என்.எம். ஹிஜாஸ்


நவகத்தேகம நவோதய பாடசாலையின் ஆசிரியையை முழந்தாளிடவைத்த வடமேல் மாகாணசபை உறுப்பினர் சரத்குமாரவின் செயற்பாட்டை வண்மையாக கண்டிப்பதாக மலையக ஆசிரியர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு எந்த ஆசிரியரையும் தண்டிப்பதற்கு அரசியல்வாதிகளுக்கு தகுதியும் இடமும் இல்லாத நிலையில் இந்த ஆசிரியையை இந்த நிலைக்கு உட்படுத்திய அரசியல்வாதியின் செயலுக்கு தமது கடுமையான கண்டனங்களை மலையக ஆசிரியர் ஒன்றியம் தெரிவிப்பதாக ஒன்றியத்தின் பிரதம இணைப்பாளர் ஆர்.சங்கரமணிவண்ணன் தெரிவித்தார்.

இவ்வாசிரியைக்கு தேவைப்படும் எல்லா சட்ட உதவிகளையும் செய்ய ஒன்றியம் தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, இச்சம்பவம் தொடர்பில் வடமேல் மாகாண சபை உறுப்பினர் ஆனந்த சரத்குமார இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது நீதிமன்றத்தின் முன்னால் ஆசிரியர்கள் அமைதியான முறையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இதன்போது, ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மாகாண சபை உறுப்பினருக்கெதிரான சுலோகங்களினையும் ஏந்தியிருந்தனர்.

கடந்த சனிக்கிழமை குறித்த மாகாண சபை உறுப்பினர் கைதுசெய்யப்பட்டதுடன் அவரை இன்றுவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

இதேவேளை, நீதிமன்றத்துக்கு முன்னால் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.



  Comments - 0

  • vallarasu Monday, 17 June 2013 08:19 AM

    அந்த மாகாணசபை உறுப்பினருக்கு மீண்டும் அம்மக்கள் வாக்களிக்கப் போவார்கள் தானே...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X