2025 மே 20, செவ்வாய்க்கிழமை

ஆசிரியையை முழந்தாழிட வைத்தமையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2013 ஜூன் 18 , மு.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.என்.எம்.ஹிஜாஸ்

நவகத்தேகம நவதோய பாடசாலையின் ஆசிரியை ஒருவரை முழந்தாழிட வைத்தமையைக் கண்டித்து புத்தளம், ஆனந்தா தேசிய பாடசாலைக்கு முன்பாக  இன்று செவ்வாய்க்கிழமை  ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது.

இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

இதேவேளை, மேற்படி ஆசிரியையை முழந்தாழிட வைத்தமையைக் கண்டித்து கொட்டுகச்சேரிய சிங்கள பாடசாலைக்கு  முன்பாக அந்தப் பாடசாலையின் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டங்களின்போது வடமேல் மாகாண சபை உறுப்பினர் ஆனந்த சரத்குமாரவுக்கு எதிரான சுலோகங்களை  ஆர்ப்பாட்டக்காரர்கள் தாங்கியிருந்ததுடன்,  எதிர்ப்பு கோஷங்களையும் எழுப்பினர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X