2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

விண்ணப்பங்கள் கோரல்

Kogilavani   / 2013 ஜூன் 19 , மு.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.என்.எம். ஹிஜாஸ்

எதிர்வரும் வடமேல் மாகாண சபை தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விருப்பமானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட மத்திய குழு தலைவரும், அதி உயர்பீட உறுப்பினருமான ஏ.என்.எம்.ஜௌபர் மரைக்கார் தெரிவித்தார்.

வடமேல் மாகாண சபை வேட்பாளர்களாக புத்தளம் மாவட்டத்தில் போட்டியிட விரும்புவோர் எதிர்வரும் 24ஆம் திகதிக்கு முன்னராக தங்களது விண்ணப்பங்களினை இல.45, மன்னார் வீதி, புத்தளம் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அவர் தெரிவித்தார்.

இவ் வருட மாகாண சபை தேர்தலில் தனித்து போட்டியிடுவதா அல்லது இணைந்து போட்டியிடுவதா என்று எதிர்வரும் தினங்களில் முடிவெடுக்கப்படுமென அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .