2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

பொதுமக்களால் வில்பத்து சரணாலயத்துக்கு ஆபத்து

Menaka Mookandi   / 2013 ஜூன் 20 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.என்.எம்.ஹிஜாஸ்


புத்தளம் பிரதேசத்திலிருந்து கலா ஓயா ஆற்றுக்கு குளிப்பதற்காக எழுவன்குளம் பகுதிக்கு செல்லும் நபர்களினால் வில்பத்து காட்டுக்கும், வன விலங்குகளுக்கும் ஆபத்துக்கள் ஏற்படுவதாக வனஜீவராசி திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆற்றுக்கு குளிப்பதற்காக வரும் நபர்கள் சமையலுக்காக அப்பகுதியிலுள்ள மரங்களை  உடைத்து விறகுக்கு பயன்படுத்துகின்றனர். பின் அவற்றிலிருந்து தீயினை அணைக்காமல் அவ்வாறே கைவிட்டு சென்று விடுகின்றனர். இதனால் வில்பத்து காட்டு பகுதியில் தீ பரவக்கூடிய வாய்ப்புள்ளது.

அவ்வாறே அவர்கள் பயன்படுத்திய பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள், போத்தல்களினையும் கை விட்டு செல்வதினால் பகுதி சூழலுக்கும், வனவிலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படுவதாக வனஜீவராசி தினைக்கள அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

இதனால் குறித்த பகுதியில் மக்கள் குளிப்பதற்கு அனுமதி வழங்குவதினை இடைநிறுத்தியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X