2025 மே 20, செவ்வாய்க்கிழமை

'உயர்தரம் சித்தியடைந்த மாணவர்களும் ஆசிரியர் சேவையில் உள்வாங்கப்படுவர்'

Kogilavani   / 2013 ஜூன் 21 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


எம்.என்.எம். ஹிஜாஸ்


'எதிர்காலத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் மாத்திரமன்றி மும்மொழியும் தெரிந்த உயர்தரம் சித்தியடைந்த மாணவர்களும் ஆசிரியர் சேவையில் உள்வாங்கப்படுவர்' என கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

'தற்போது நாட்டில் யுத்தம் முடிவுக்கு வந்துள்ள நிலையில் சகல மக்களும் ஒற்றுமையாக வாழ அனைத்து மொழி அறிவுகளும் அவசியம். சிங்கள பாடசாலைகளில் தமிழ் மொழி ஆசிரியர் பற்றாக்குறையாகவுள்ளது. அதுபோன்று தழிழ் மொழிமூல பாடசாலைகளில் சிங்கள பாட ஆசிரியர் பற்றாக்குறையாகவுள்ளது' என்றும் அவர் தெரிவித்தார்.

நுரைச்சோலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் பந்துல குணவர்த்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'கொழும்பு, காலி, கண்டி ஆகிய மாவட்டங்களில் காணப்படும் சகல வசதிகளுமுடைய பாடசாலைகள் போன்று நாட்டின் சகல பிரதேசங்களிலும் பரவாலாக அனைத்து வசதிகளுமுடைய 1000 பாடசாலைகள் நவோதைய பாடசாலைகளாக உள்வாங்கி அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன. 

தெரிவு செய்யப்பட்ட இவ் ஆயிரம் பாடசாலைகளிலும் தொழில்நுட்ப பிரிவு, மும்மொழி பிரிவு உள்ளடங்களாக பல்வேறு வசதிகள் செய்யப்படவுள்ளன.

தற்போது நாட்டில் யுத்தம் முடிவுக்கு வந்துள்ள நிலையில் சகல மக்களும் ஒற்றுமையாக வாழ அனைத்து மொழி அறிவுகளும் அவசியம். சிங்கள பாடசாலைகளில் தமிழ் மொழி ஆசிரியர் பற்றாக்குறையாகவுள்ளது. அதுபோன்று தமிழ்மொழிமூல பாடசாலைகளில் சிங்கள பாட ஆசிரியர் பற்றாக்குறையாகவுள்ளது.

எனவே எதிர்காலத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் மாத்திரமன்றி மும்மொழியும் தெரிந்த உயர்தரம் சித்தியடைந்த மாணவர்களும் ஆசிரியர் சேவையில் எதிர்காலத்தில் உள்வாங்கப்படுவர்' என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X