2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

தெலியகொன்னவில் ஏற்பட்ட பதற்ற நிலைக்கு சுமூக தீர்வு

Kogilavani   / 2013 ஜூன் 22 , மு.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


-இக்பால் அலி

குருணாகல், தெலியகொன்ன ஜும்ஆப் பள்ளிவாசலின் முன்னால் நேற்று வெள்ளிக்கிழமை மாலை ஏற்பட்ட பதற்ற நிலை கட்டுப்பாட்டுக்கொண்டு வரப்பட்டது.

மின்சார கட்டண அதிகரிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் விடுதலை முன்னணியினர் நேற்று வெள்ளிக்கிழமை குருணாகல், தெலியகொன்ன ஜும்ஆப் பள்ளிவாசலின் முன்னால் நடத்த இருந்த ஆர்ப்பாட்டத்தை கிராமத்தவர்கள் தடுத்து நிறுத்த முயன்றபோது அங்கு இருதரப்பினருக்கும் இடையில்  ஏற்பட்ட வாய்த்தர்க்கத்ததை தொடர்ந்து பதற்றமான நிலை ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து குருணாகல் மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் அப்துல் சத்தார் மற்றும்  பள்ளிவாசல் நிர்வாகத்தினர், பொலிஸார் ஸ்தலத்திற்கு வரழைக்கப்பட்டு பிரச்சினையை சுமூக நிலைக்கு கொண்டுவந்தனர்.

பின்னர் ஆர்பாட்டக்காரர்கள் ஆர்பாட்டத்தை நடத்தாது கலைந்து சென்றனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .