
-இ.அம்மார்
மேசி லங்கா நிறுவனத்தின் அனுசரணையுடன் குருநாகல், தெலும்புக்கொல்ல சமூக அமைப்பு மற்றும் தெலும்புக்கல்ல ஹுதா ஜும்ஆப் பள்ளிவாசல் நிர்வாகத்தினர் இணைந்து தெலும்புக்கொல்ல அல் - ஜஸ்ரா கிராமத்தில் மூன்று கோடி ரூபா செலவில் மிகவும் பின்தங்கிய, வீடற்ற குடும்பங்களுக்கு நிர்மாணிக்கப்பட்ட 24 வீடுகளை பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று குருநாகல் தெலும்புக்கொல்ல சமூக அமைப்பின் தலைவர் அஷ;nஷய்க் ஏ.எஸ்.ஹிஸ்புல்லாஹ் தலைமையில் இன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கட்டார் நாட்டைச் சேர்ந்த ரஹ்மா சர்வதேச அமைப்பின் பணிப்பாளர் உறுப்பினர் ஹமட் பின் முஹமட் ஏ.சஹ்வானி கலந்து கொண்டார். இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக குருநாகல் மாநகர முதல்வர் காமினி பெரமுனகே, குருநாகல் மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைப்பாளர் அப்துல் சத்தார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அத்துடன் மேசி லங்கா நிறுவனத்தின் பணிப்பாளர் குவைட் நாட்டைச் சேர்ந்த விதிவிடப்பிரதிநிதி நசார் ஹசன் அபூ ஜுவைத் மற்றும் பௌசுல் ரஹ்மான் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
குவைட் நாட்டைச் சேர்ந்து அஹ்மட் பின் அப்துல்லாஹ் அல்கால் அவர்களின் நிதி உதவியினால் நிர்மாணிக்கப்பட்ட இந்த வீட்டுத் திட்டத்தில் மின்சார வசதி, தண்ணீர் வசதி, முன்பள்ளிப் பாடசாலை, பள்ளிவாசல் உள்ளிட்ட சகல வளங்களையும் கொண்ட மாதிரிக் கிராமமாக அமைக்கப்பட்டுள்ளது.