2025 மே 20, செவ்வாய்க்கிழமை

போலி விஸா நிலையம் சுற்றிவளைப்பு: இருவர் கைது

Kanagaraj   / 2013 ஜூன் 24 , பி.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம். ஹிஜாஸ்

புத்தளத்தில் போலி விஸா பத்திரம் தயாரிக்கும் நிலையமொன்று இன்று திங்;கட்கிழமை இரவு சுற்றி வளைக்கப்பட்டுள்ளதுடன். சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், போலியாக தயாரி;க்கப்பட்ட இரண்டு விஸா பத்திரங்கள் மற்றும் அதனை தயாரிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட கணினியும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த சந்தேக நபர்கள் நீதி மன்றத்தில் நாளை செவ்வாய்க்கிழமை ஆஜர் படுத்தப்படுவார்களெனவும் தெரிவித்த புத்தளம் பொலிஸார் இது தொடர்பில் மேலதிக  விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X