2025 மே 20, செவ்வாய்க்கிழமை

மாதம்பை பஸ் விபத்தில் நால்வர் காயம்

Kanagaraj   / 2013 ஜூன் 25 , பி.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். எம். மும்தாஜ்

சிலாபம் கொழும்பு பிரதான வீதியின் மாதம்பை பழைய நகரில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் நால்வர் காயங்களுக்குள்ளாகி சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பஸ் வண்டியொன்று வீதியை விட்டு விலகி வீதியினருகில் அமைந்துள்ள பழங்கள் விற்பனை செய்யப்படும் கடையொன்றினுள் நுழைந்தே விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்றுக்காலை இடம்பெற்ற இவ்விபத்தின் போது பழக்கடையினை நடாத்திச் செல்லும் இருவரும் அங்கு பழங்கள் வாங்குவதற்கு வந்துள்ள ஒருவர் மற்றும் பஸ் வண்டியில் பயணித்த பயணி ஒருவருமே இவ்வாறு காயமடைந்து வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ளனர்.

சிலாபம் நகரிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பஸ் வண்டியே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த பஸ் வண்டியின் டயர்கள் போக்குவரத்திற்கு உகந்ததாக இல்லாதிருந்துள்ளது. இதேவேளை இவ்விபத்து இடம்பெறுவதற்கு சற்று நேரத்திற்கு முன்னர் மாதம்பை பொலிசார்; குறித்த பஸ் வண்டியின் சாரதிக்கு வீதி சட்டங்களை மீறிய குற்றத்திற்காக தண்டப்பணம் விதித்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

பஸ் வண்டியின் சாரதி மாதம்பை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மாதம்பை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X